- Saturday
- July 25th, 2026
அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே குறித்த...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவருடன் விமானப்படை தளபதி எயா ர்மார்சல்சுமங்கல டயஸ் ஆகியோரும் வந்திருந்தனர். வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு வருகை தந்துள்ள இவர்கள் பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு...
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க...
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட 15 பேரிடமும் காரைநகரைச் சேர்ந்த ஒருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ்...
புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ள இந்தக் கடனின் மீளச் செலுத்தும்...
“யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும் என்று பரிந்துரைகளை வழங்கவுள்ளோம். அதுதொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது” இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ “கொவிட் -19” எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏனைய நாடுகளில்...
தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்...
பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெலியத்தை அபிநவாராமை விகாரையில் நேற்று (2020.04.15) எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார். முற்பகல் 09.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் அவர்களினால் பிரதம அமைச்சர் அவர்களுக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்க்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்ற...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.04.15) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. கோவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் தேவைப்படும் பாதுகாப்பான ஆடைத் தயாரிப்புகளுக்கு (Personal protective Equpments ) காணப்படும் கேள்விக்கு ஏற்ற வகையிலான...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர் இருவரும் கடந்த மார்ச்...
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த...
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணிக்கு...
யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள...
"கொவிட் -19" கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 5000 பேரளவில் இலங்கைக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனினும் தூதரகங்களின் மூலமாக அவர்கள் குறித்து ஆராய்வதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 900 இலங்கையர்களை விரைவில் வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும், கல்விகற்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு...
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பிசிஆர் (Polymerase Chain Reaction) பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று நிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
வடக்கில் தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகிறார் பாதுகாப்புச் செயலர்!!
கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்துக்கு நாளை முற்பகல் வருகை தரும் பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் கட்டளைத்...
பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்று வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகளை அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைக் கடந்த முதலாம் மற்றும் 2ஆம்...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....
Loading posts...
All posts loaded
No more posts
