Ad Widget

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்பாணம் விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவருடன் விமானப்படை தளபதி எயா ர்மார்சல்சுமங்கல டயஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.

வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு வருகை தந்துள்ள இவர்கள் பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட உரையாற்றவுள்ளார்

விமானப்படை தளத்தில் இடம்பெறும் நிகழ்வில் முப்படையினர் மற்றும் பொலிசார் கலந்து கொண்டுள்ளனர் .குறித்த விஜயத்தின் பின்னர் கிளிநொச்சி மற்றும் வன்னி பிரதேசத்திற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம் செய்யவுள்ளார்.

Related Posts