- Monday
- May 4th, 2026
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த வருடம் முழுவதும் எரிபொருள் விலைகளில் அதிகரிப்போ அல்லது குறைப்போ செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2019 ஆம் ஆண்டு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய்...
மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மொஹான் கருணாரத்ன பிரதிப் பணிப்பாளர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2020.03.19
அரச ஊழியர்கள் அனைவரது மார்ச் மாத சம்பளத்தை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குமாறு திறைசேரிச் செயலாளர் பணித்துள்ளார். இதுதொடர்பான அறிவுறுத்தல் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் தமது வீடுகளிலிருந்தவாறே இணையம் மூலமாகக் கல்வி கற்கும் வகையிலான ஏற்பாடுகளை கல்வியமைச்சு ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து கொழும்பிலுள்ள...
பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா தொடர்பில் மார்ச் 25ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (மார்ச் 18) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 50 பேர்) அதிகரித்துள்ளது. நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள்...
கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 862 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு 190,873. இதேவேளை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கிட்டத்தட்ட 80,000 பேர்...
நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம்…. நாடு திரும்பிய அனைவரும் கண்காணிப்புக்கு….. மக்களின் சாதாரண இயல்பு வாழ்வுக்கு அவசியமான அனைத்து வசதிகளும்….. மக்களை அச்சத்துக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை… கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ....
புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று(புதன்கிழமை) மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கொச்சிக்கடை உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. புத்தளத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா...
வடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு...
மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்து மற்றும் செயல்முறைப் பரீட்சைகள் யாவும் மறு...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மார்ச் 17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 44 பேர்) அதிகரித்துள்ளது. அத்துடன், இன்று மார்ச் 17 செவ்வாய்க்கிழமை மட்டும்...
கொரோனா (கொவிட்-19) வைரஸில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றின் முதல்கட்ட மனித பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது என்று அஸ்சோஸிகட் ப்ரஸ் நியூஸ் அகன்சியை (APNA) மேற்கோள்காட்டி பிபிசி ஆங்கில சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி வஷிங்கடனில் உள்ள கைசர் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு நோயாளிகளிடம் இந்த ஊசியின் மனித பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் முதலாவதாக...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 73 வயதான பெண் ஒருவா் இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருக்கின்றாா். லண்டனில் இருந்து இலங்கை வந்த குறித்த பெண் யாழ்.கந்தா்மடம் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந் நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில்...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன்,...
முல்லைத்தீவு - குமுலமுனை பகுதியில் குடிவரவு - குடியகல்வு சட்டங்களை மீறும் வகையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் ஐவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரஜைகளான 17, 33, 37, 40 மற்றும் 53 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts
