இலண்டனில் இருந்து வந்து கந்தர்மடத்தில் தங்கியிருந்த பெண் கொரோனா அச்சத்தில் யாழ் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 73 வயதான பெண் ஒருவா் இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருக்கின்றாா். லண்டனில் இருந்து இலங்கை வந்த குறித்த பெண் யாழ்.கந்தா்மடம் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந் நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில்...

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுவில் நால்வர் கையொப்பம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன்,...
Ad Widget

வீசாயின்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் ஐவர் கைது!!

முல்லைத்தீவு - குமுலமுனை பகுதியில் குடிவரவு - குடியகல்வு சட்டங்களை மீறும் வகையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் ஐவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரஜைகளான 17, 33, 37, 40 மற்றும் 53 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 170 இலங்கையர்கள் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு

இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து வருகை தந்த 170 இலங்கைப் பிரஜைகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிந்து, தவிர்ந்து செயற்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லாது, தமது வீடுகளில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இவர்கள் அனைவரும்...

கோரோனா பற்றி வடக்கு மாகாண மக்கள் பின்பற்றவேண்டியவை – மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுரை

உலகளாவிய தொற்றுநோயாக கோரோனா (COVID 19) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 16.03.2020 வரை 28 நோயாளிகள் கோரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை வடமாகாணத்தில் கோரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு: தனிமைப்படுத்தல் (Quarantine)...

பஸ்கள் , ரயில்களில் இன்றும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களில் ஒரு வார காலத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கும் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைத் தவிர முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுறுமாறு பஸ் ஊழியர்களுக்கு ஆலோசனை...

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மார்ச் 17ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தியானி குணதிலக தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் தென்மாகாண அலுவலகத்தின் அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது....

பண்டிகை காலத்தில் புடவைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தேவையான புடவைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். புடவை முதலானவற்றை கொள்வனவு செய்யும் பொழுது சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை தொடுதல், அந்த...

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்!!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், பிரதேச காரியாலயங்கள், அத்தியாவசிய சேவை தவிர்த்த அரச கூட்டுதாபன திணைக்களங்கள்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அவசர அறிவிப்பு!!

மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது....

கொரோனா தொற்று – பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 2 வாரத்திற்கு அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக இன்று முதல் பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. அந்தவகையில்,...

கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

கொரோனா வைரஸ் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை அறிவதற்கு தொலைபேசி இலகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 011 30 90 502 மற்றும் 113 என்ற இலங்கங்களின் ஊடாக அழைத்து தகவல்களை பெற முடியுமென இராணுவ தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம்! -த.சத்தியமூர்த்தி

வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்றையதினம் தெரிவிக்கையில், “இத்தாலியிலிருந்து இன்று (நேற்று) வருகைதந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்ற...

தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு?? – கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா...

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது...

கொரோனோ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாடளாவிய ரீதியில் 29 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுடன் நாடளாவிய ரீதியில் 29 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள 15 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பிரிவு, அவர்களில் 08 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இந்த விடயம் தொடர்பாக...

கொரோனா எதிரொலி – விமான சேவைகள் இரத்து!!

நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சிவில் விமானம் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்தோடு மறு அறிவித்தல் வரும் வரை குறித்த தடை அமுலில் இருக்குமென சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் சந்தசிறி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று...

ஏப்ரல் 20ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சர்

கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை...

கொரோனா வைரஸ் தொற்று : நாளை முதல் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு??

நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் பிற்பகல் 2 மணிக்கு வௌியிடப்படும் என கல்வி அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading posts...

All posts loaded

No more posts