Ad Widget

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது!

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த அவர் இது ஒரு சாதகமான அறிகுறியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த இராணுவ தளபதி, கடந்த 18 நாட்களில், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கடற்படையினரை தவிர பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு சாதனை. ஆனால் அச்சுறுத்தல் முழுமையாக மறைந்துவிடாததால் நாங்கள் விழிப்புணர்வை தளர்த்திக் கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளை மையமாகக் கொண்டு சமூகங்களிடையே பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts