- Sunday
- May 3rd, 2026
இலங்கையில் கோரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவர் இன்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார். “இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்....
யாழ்ப்பாணம. மாவட்டத்தில் எந்த வருமானமும் அற்றவர்களிற்கும் உடனடியாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பணக் குடாநாட்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் குடும்பங்கள் தற்போது வாழ்கின்றனர். இவர்களில் அரச ஊழியர்கள் குடும்பம் , ஓய்வூதியர்கள் குடும்பம் என சுமார் 36 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதனைவிட 76 ஆயிரம்...
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில், பொன்னாலை பற்றைக்காட்டில் கசிப்பு குகை ஒன்று பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது. கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று (03)...
“உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமைதரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து , அனைவரும் நோய் பரவாது காக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்” இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும்,தெல்லிப்பழைஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்தியுள்ளார். “சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சைவக் கோவில்களை சிலர் திட்டமிட்டு...
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுவர்களில் அரியாலையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறமி, 20 வயதுடைய இளைஞன் மற்றும் 36 வயதுடைய பெண்...
கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை வழங்கப்படவுள்ளது என்று தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர்...
யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ்...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு...
50 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொவிட் – 19இன்...
நாட்டின் தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றுகூடமுடியாமை மற்றும் ஊரடங்கு காரணமாக இம்முறை பரிசுத்த வார, ஈஸ்டர் வழிபாடுகள் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளன. இந்த வழிபாடுகளில் ஆயர் இல்லத்தில் வசிக்கும் குருக்கள் மட்டும் இடம்பெறுகின்றன என்று அருட்தந்தை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என குறித்த சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாயக் கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு 3 காரணிகளை...
கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நான்காவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் முன்பு தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றிலிருந்து இரண்டு வாரகாலத்தினுள்...
கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளநிலையில் நீரிழிவு மற்றும் அகச்சுரப்பியல் நோயாளர்கள் மருந்து பாவிக்கும் முறை தொடர்பாக சுகாதார அமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இந்த அறிவித்தலை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு தொடர்பாக 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை...
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின்காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார். 73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை...
சிறு தானிய பயிர்ச் செய்கையைப் பாதுகாக்க கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்குச் சென்ற விவசாயிகள் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 5 பேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைநகர் மணியம் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மூன்று பேரைக்...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலமநேற்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை...
Loading posts...
All posts loaded
No more posts
