ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ “கொவிட் -19” எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏனைய நாடுகளில்...

பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Ad Widget

பிரதம அமைச்சர் அவர்கள் எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார்

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெலியத்தை அபிநவாராமை விகாரையில் நேற்று (2020.04.15) எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார். முற்பகல் 09.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் அவர்களினால் பிரதம அமைச்சர் அவர்களுக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்க்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்ற...

ஜனாதிபதி செயலணி – ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.04.15) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. கோவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் தேவைப்படும் பாதுகாப்பான ஆடைத் தயாரிப்புகளுக்கு (Personal protective Equpments ) காணப்படும் கேள்விக்கு ஏற்ற வகையிலான...

அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கோரோனா வைரஸ்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர் இருவரும் கடந்த மார்ச்...

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு !!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த...

19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு 10 மணிநேரம் தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணிக்கு...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி!!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் சிரமம்

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 5000 பேரளவில் இலங்கைக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனினும் தூதரகங்களின் மூலமாக அவர்கள் குறித்து ஆராய்வதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 900 இலங்கையர்களை விரைவில் வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும், கல்விகற்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு...

பாடசாலை மாணவர் வாகன, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் 5ஆயிரம் ரூபா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றியிருப்போருக்காக அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்று பாடசாலை மாணவர் வாகன சாரதிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனிடையே, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலை...

யாழ் போதனா வைத்தியசாலையிலும் பிசிஆர் பரிசோதனையை ஆரம்பிக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பிசிஆர் (Polymerase Chain Reaction) பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம். நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று நிலமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...

வடக்கில் தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகிறார் பாதுகாப்புச் செயலர்!!

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்துக்கு நாளை முற்பகல் வருகை தரும் பாதுகாப்புச் செயலாளர், யாழ்ப்பாணம் கட்டளைத்...

யாழில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மருத்துவ அறிக்கைகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்று வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகளை அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைக் கடந்த முதலாம் மற்றும் 2ஆம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரியாத் பதியூதீன் கைது!!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

பெரும் அழிவிலிருந்து யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றிய சுகாதாரத்துறை!!

“மதபோதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15 தொற்றாளர்களுடன் கோரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறையினரது சேவை, யாழ்ப்பாணம் சமூகம் இன்று பெரும் சேதத்தைத் தடுக்க பங்களித்தது என்றால் மிகையாகாது” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள்...

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நால்வருக்கு கோரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேரின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு...

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்...

கோயில்களில் ஒன்றுகூடியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பொலிஸார்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவினையும் மீறி திருகோணமலையில் புதுவருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்றுகூடியவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (திங்கட்கிழமை) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ்...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம்!

கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மீதான விசாரணைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் குகதாசன் வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அங்கு கடமையாற்றும் வைத்தியர்களால் அரச மருத்துவ அதிகாரிகள்...

டெங்கு நோய் பரவுக்கூடும் – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர்

பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவுக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான நீர் இருக்கும் பகுதிகள், மழைநீர் வழிந்தோடும் குழாய்கள் மற்றும் வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார். ஊரடங்கு...
Loading posts...

All posts loaded

No more posts