சுழற்சி முறையில் நடமாடும் வங்கிச் சேவை இன்று ஆரம்பம்!! எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி மக்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்!!

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் நடமாடு வங்கிச் சேவையை ஹற்றன் நஷனல் வங்கி இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை நடத்துவதாக வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு...

கோரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 219ஆக உயர்வு; 59 பேர் குணமடைவு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 219ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 59 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
Ad Widget

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தினரும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கநேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில், முதற்கட்டமாக 460 குடும்பங்களுக்கு தலா ஒன்று முதல் 2 கிலோ நிறையுடைய...

நாளை மாலை 6 மணிவரை வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம்!!!

காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி காவல் துறை மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். காவல் துறையினரின் இந்த...

தோப்புக்கரணம் போடவைத்த பொலிஸாரின் வேலை பறிபோனது!!

ஊரடங்கு சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றுமுதல் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தர்வின் பேரில், நகர போக்குவரத்து...

முடக்கப்பட்ட தாவடிக் கிராமம் 21 நாள்களின் பின் விடுவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கோரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி...

அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன....

மந்திகை வைத்தியசாலை மருத்துவர்கள் செவ்வாயன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகரை இடமாற்றும் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காததால் வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் அனுப்பிவைத்த ஊடக...

சுவிஸ் போதகர் யாழிற்கு வந்து கொரோனாவை தமிழ் மக்களிடம் பகிர்ந்துவிட்டு பறந்து சென்றுவிட்டார்!!

சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த பாதிரியார் யாழ்ப்பாணத்தில் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பகிர்ந்துவிட்டுப் பறந்து சென்றுவிட்டார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்க்ள கொரோனாவின் பிடியில் சிக்கி மரணித்துள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள தமிழ் மக்கள் இடையே கொரோனா...

கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு...

இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக வணக்கமாக பிரார்த்திக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கழிக்க வேண்டியுள்ளது. தேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின் சுகாதார நலனுக்கு ஏற்புடையவாறு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகள் புத்தாண்டு நாட்களிலும் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை உங்களுக்கு...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. “யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின்...

யாழில் நிறைவடையும் கொரோனா காலம்: ஒரு வாரமாக தொற்றாளர்கள் இல்லை!

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் ஒருவரும் கொரோனா தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில்...

உயிர்த்த கிறிஸ்து உயிர்கொல்லி ‘கோரோனா’வை ஒழித்து உலக மக்களுக்கு உயிர்ப்பளிப்பாராக -யாழ் ஆயர்

இறைமக்களாகிய நாம் எமது தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கின்றோம். கிறிஸ்து இயேசுவின் பாடுகள் – இறப்பு – உயிர்ப்பு இன்றைய பயங்கரமான சூழலில் எமக்கு ஆழமான இறை விசுவாசத்தையும், இறைபராமரிப்பையும் உணர்த்தி நிற்கின்றது என்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு செய்தியிலேயே அவர்...

பாடசாலைகள் அனைத்தும் மே 11ஆம் திகதியே ஆரம்பமாகும்!!

அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முதலாம் தவணை விடுமுறை மே 10ஆம் திகதிவரை...

யாழில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தினர் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்- நல்லை ஆதீன முதல்வர்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில்...

சுவிஸ் போதகர் கூறிய பொய்யே யாழில் இந்நிலைக்குக் காரணம்: அனைவரும் பொறுப்புடன் செயற்படுக!- மருத்துவர் முரளி

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகர் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் யாழ். மாவட்டம் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 7 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க...

யாழ். தாவடிக்கு விடுதலை- வடக்கு சுகாதார பணிப்பாளர்

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (சனிக்கிழமை) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி...

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு...
Loading posts...

All posts loaded

No more posts