- Friday
- July 24th, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில், எதிர்வரும் 9ஆம் திகதி நாளை மானிப்பாய் நவாலி தேவாலயத்திற்கு முன்பாக...
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ்...
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி...
வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று...
விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு...
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. முன்னர் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில்...
ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர்...
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், திருமண...
யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின்...
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில் ) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போல் தோளில் பை மற்றும் கையில் பையுடன் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. பேசாலை உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் செய்துள்ளார். அவரது...
கொழும்பு – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் அந்த தொற்றுக்கு உள்ளாகவில்லை என பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொரோனா தொற்று நோயாளர்...
கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கரும்புலிகள் தினமான நேற்றுக் காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸ் விசேட...
வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று திங்கட்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி முதற் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை...
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வீரக்கெட்டியவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும்...
பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் அணிவது கட்டாயமானதா என அனில் ஜாசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே...
நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை (2020.07.01) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்...
தமிழகத்திலிருந்து வேலணை பகுதியை சேர்ந்த ஒருவர் நெடுந்தீவு தெற்கு கடற்கரை வழியாக தீவுக்குள் நுழைந்த நிலையில், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புதுறையினர் அவரை கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். சிறிய தெப்பம் ஒன்றில் தமிழகத்திலிருந்து நெடுந்தீவுக்குள் நுழைந்த குறித்த நபர் வேலைணை 2ம் வட்டாரத்தை சேர்ந்த சுரேஸ்(வயது29) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
