- Sunday
- May 3rd, 2026
யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “கடந்த...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்...
உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...
நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா தொற்றுநோயானது இலங்கையிலும் பரவி வருவது தாங்கள் அறிந்ததே. கோரோனா...
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் கடந்த வியாழக்கிழமை அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார். கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும். இந்நிலையில், முயற்சியாளரின்...
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாண சபை தொடர்பில் பேசுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாகாண சபைகளுக்கு...
நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உலகையே அச்சுறுத்திவரும் கோரோனா வைரஸ் நோயானது தற்போது எமது நாட்டிலும் வேகமாக பரவி வருவதை...
கோவிட் -19 தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் எந்தவொரு தனியார் துறை ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும், அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என்றும்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நாளை சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாண பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கைதடி , நுணாவில், மட்டுவில் வாகையடி, நாவற்குழி, கோவிலாக்கண்டி, தச்சந்தோப், பு மறவன்புலவு, அறுகுவெளி, தனங்கிளப்பு, வெற்றிலைக்கேணி ,...
நெடுந்தீவில் பறித்து எரிக்கப்படுகின்றன வெற்றிலை பாக்குகள் என தலையங்கத்தோடு யாழ்ப்பாணம் பிராந்திப் பத்திரிக்கையொன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இந்தச் செய்தி தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் இருந்து மறுப்புக்களும் வெளியாகி இருந்தன. உண்மையில் அங்கு என்ன நடந்தது என பல தரப்புக்களிலும் விசாரித்தோம். நெடுந்தீவு சுற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவுப் பிரதேசமாகும். ஏற்கனவே...
அடுத்த வாரம் தொடக்கம் ஊரடங்கு தளர்க்கப்படுவதால் நிலைமைகள் வழமைக்கு திரும்பிவிட்டதாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். கொவிட் 19 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறோமே தவிர நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை ஒருபோதும் வழங்க முடியாது என்கிறார் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர. எம்மை சுற்றி வைரஸ் அச்சுறுத்தல்...
நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அன்பார்ந்த பொதுமக்களே! தற்போது மிகவும் ஆபத்தான கோரோனா தொற்று...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. இரண்டு வீடுகளுக்குள்...
வீடு மற்றும் கடைகளின் உரிமையார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டோரிடம் வாடகைக் கட்டணத்தை அரைவாசியை வசூலிக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும் புற நகர்களில் தங்கியிருந்து உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களிடம் வாடகைக் கட்டணத்தின் அரைவாசியை வசூலிக்குமாறு அரசு கேட்டுள்ளது. வீடுகள் மற்றும்...
கோரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாககோரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 180க்கும் அதிகமான நாடுகள் பொருளாதார ரீதியாகவும், நோய்த் தொற்று சார்ந்தும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இதில் அமெரிக்கா,...
சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணித்துள்ளார். இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் கம்லத் தெரிவித்ததாவது; அழகு நிலையங்கள் மற்றும்...
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததால் அந்தக்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ...
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்துள்ளது. இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில்...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06-05-2020) தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையின் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
