கந்தக்காடு புனர்வாழ்வு கைதி வைத்தியசாலையிருந்து தப்பினார் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த கைதியான நோயாளியொருவர் தப்பிச்சென்றுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சீனன்குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட் ஹசிம் முகமட் நசீம்...

நல்லூரானின் கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழாவில் Covid – 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற...
Ad Widget

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்நிலையில், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்....

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவுகூரல்!

கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு!!

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் தபால் மூல வாக்களிப்பு 25ம்...

வடக்கின் புதிய ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா!!

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகின்றது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்....

யாழ். ஆயர் மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையில் சந்திப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், யாழ். ஆயரை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்களே யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ்,...

புதிய பிறப்புச் சான்றிதழில் இனம் மற்றும் மதம் பற்றிய விவரம் வெளிப்படுத்தப்படாது!

புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் மற்றும் மதம் பற்றிய விவரம் வெளிப்படுத்தப்படாது என்று பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கையர்” என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாய் – தந்தையரின் திருமண விவரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” வெளியீடு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” செயல்திட்ட வரைவாக வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், ஶ்ரீலங்கா...

நல்லூர் திருவிழா குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டது யாழ்.மாநகர சபை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...

யானையின் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் யாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்!

கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்க நேற்று (புதன்கிழமை) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் வழிபாட்டு இடத்திற்கு...

புலிகளுக்கு கட்டாய ஆள்சேர்ப்பு செய்த குற்றம்; விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார். கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுவித்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை...

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூசா சிறைச்சாலையில் உள்ள மிகவும் ஆபத்தான கைதிகள் சிலர் ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உள்ள கொஸ்கொட தாரகவை விசாரணைக்கு உட்படுத்திய போது, வெளியான தகவல்கள்...

யாழில் இடம்பெற்ற கொள்ளை: 17 பவுண் தங்க நகைகள் பறிபோயின!

யாழ்ப்பாணத்தில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, “வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 தேர்தல் அறிக்கை வரலாற்றுப் பின்னணி அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான...

சுவரொட்டி ஒட்டவிடாத வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்; பெண் வைத்தியசாலையில்: சிறிதரனின் சாரதி உள்ளிட்ட மூவர் மதுபோதையில் கைது!

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்...

ஸ்மார்ட் லாம்ப் கோபுரத் திட்டத்திற்கு எதிரான நீதிப்பேராணை மனு தள்ளுபடி!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் (Smart Lamp Pole) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது. மனுதாரரின் மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பாக திருப்தியின்மை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான...

நொண்டிச்சாட்டுக்களை கூறிக்கொண்டு ஓடுகின்றனர் நான் விவாதத்திற்கு தயார் – சுமந்திரன் பகிரங்க சவால்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்தை நடத்த தான் தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸ்ரீகாந்தா சவால்விட்டுள்ள நிலையில் பொதுவெளியில் நடுநிலையான நபரை...

குருபரனுக்கு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளேன்: எம்.ஏ.சுமந்திரன்

கலாநிதி குருபரன் என்னிடமும் சட்ட ஆலோசனை கோரினார். அவருக்கு அதனை வழங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டு, சட்டத்தரணியாகவும் பணியாற்ற வேண்டுமென கோரும், கலாநிதி கு.குருபரன் விவகாரம் அண்மை நாட்களில் சூடு பிடித்திருந்தது. குருபரனிற்கு இழைக்கப்பட்டது அநீதி என ஒரு தரப்பும், ஒரு அலுவலக...

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். தொற்றுநோய்...
Loading posts...

All posts loaded

No more posts