- Saturday
- May 2nd, 2026
நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி உத்தியோகத்தர்களை வற்புறுத்திய பிரதேச செயலாளர் குறித்து முறையிட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது. யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவரே இந்த தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் அரச கட்சி என்றுமில்லாத வகையில் தேர்தல்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி...
யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...
நாட்டில் கடந்த நாட்களாக தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 50 சதவீத டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த களமாக அடையாளம்...
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை அண்மைக்காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்....
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா...
தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும் – சுகாஷ்
“தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும். எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்” என்று அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர், சட்டத்தரணி...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் நேற்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. எனினும் 12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துரித விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டர்....
போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு...
எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பான சிடோர்னியா கேபிறியல் ஆகியோர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசியபோதே...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரியமுறையில் பின்பற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார். வடமாகாண மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநரின் செயலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாகாணத்தில் இடம்பெற்றுவரும் போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி...
வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாக வட.மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் உபதலைவர் பா.லக்சன் தெரிவித்துள்ளதாவது, “இனிவரும் காலங்களில் அரச துறைகளில் பணியாற்றும்...
வடக்கு – கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்குகின்றனர் அரசின் ஆதாரவுக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள். சிலர் இளையோரிடம் விண்ணப்பப்படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரிக்கின்றனர்” என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ. சேனாதிராசா தெரிவித்தார். இவ்வாறு தவறான தகவல்களை வழங்கி இளையோரின்...
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, “70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் உயிர்கொடுத்து காத்துவரும் எமது அடிப்படை அபிலாசைகள்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டடு விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு எதிர்வரும் 12ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கமைய இந்த பதவிக்காக ஆறு பேர் விண்ணப்பத்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒருவரை துணைவேந்தராகத் தெரிவுசெய்ய வேண்டும். இதற்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில்...
அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) வரையறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10...
நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் ஆலய உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன நாளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
அதிபர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
