Ad Widget

கொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம்- தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு, அதிகம் ஆபத்தான பகுதிகளின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “27 பொதுசுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன.

இதில் கொழும்பில் ஏழு சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளும், கம்பஹாவில் 19 சுகாதாரபரிசோதகர் பிரிவுகளும், களுத்துறையில் இரண்டு சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் ஆபத்தானவையாகும்.

அதாவது, கொழும்புமாநாகர சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளும், நுகேகொடை, மொரட்டுவ, பத்தரமுல்ல, கொலனாவ உட்பட பலபகுதிகள் மிகவும் ஆபத்தானவையாக காணப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளது.

Related Posts