Ad Widget

கொரோனா வைரஸ்: நோயாளியின் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்

கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா தொற்று உறுதியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு அவர்களுக்கு தொற்று உள்ளதாக என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

முதியவர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் இதனை கருத்திற்கொண்டு நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

Related Posts