- Friday
- May 1st, 2026
யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை)சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக்...
இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,...
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கும் நீதிப் போராட்டத்தை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் நீதி கோரும் நாளாகும். இலங்கையிலும் தமிழ் இன...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற களவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று காலப்பகுதியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாங்கள்...
அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களிடம் கையளிக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கான நியமனக் கடிதங்கள் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அவையும் நேற்றைய தினம் உரிய மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தொழில் சந்தையில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்தப் பதவிக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை...
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை நீக்கப்பட கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ்...
எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருமாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆக்கபட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 30 ஆம்...
கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வரும் 29, 30, 31 மற்றும் செப்ரெம்பர் முதலாம் திகதி என நான்கு நாள்களுக்கு பரீட்சாத்தமாக நடத்தப்படும் இந்தச் சேவை மக்களின் தேவையறிந்து தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கோரோனா...
பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கும் இணைக்கும் திட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்தனர். அரசினால் 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. அதில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன....
“நித்திரை மாத்திரைகளை (Piriton) அதிகளவில் சாப்பாட்டில் கலந்து மருமகளுக்குக் கொடுத்தோம். அவள் மயக்கநிலையை அடைந்ததும் உப்பளப் பாத்திக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்தோம். அதன் பின்னர் அவளது முகத்தை நீருக்குள் அமுக்கிக் கொலை செய்தோம்” இவ்வாறு மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது மாமனார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பிரதான சந்தேக நபரான...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிவில் உடையில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். இதன்போது, காசு அதிகம்...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தாக்கப்பட்டதற்கு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்பட தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னிப்புக் கோரினர். தன்...
வடக்கு மாகாணத்தில் பல்லேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச்செய்வதும், ஏற்றுமதிக்கு ஏற்பாடு...
நாளை சனிக்கிழமை தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் தடங்களின்றிய மின் விநியோகத்தை நாளை முன்னெடுக்க முடியும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. நுரைச்சோழை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தான் கொள்கை, உரிமைக்காக போராடுவார்களா? இவ்வாறு கேள்வியேழுப்பியுள்ளார் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன். தனது கொள்கைக்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துகத்தை ஏற்காதவர்தான் மாமனிதர் சிவமகாராசா எனத் தெரிவித்தார் கூட்டுறவாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க...
Loading posts...
All posts loaded
No more posts
