Ad Widget

பாடசாலைகள் மீள திறக்கப்படுமா என்பது தொடர்பாக கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து!

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி மீளத் திறப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூன்றாம் தவணைக்காக திறப்பது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

நவம்பர் 9ஆம் திகதி திறக்கப்பட வேண்டிய பாடசாலை, இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டு நவம்பர் 23ஆம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைகள் அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அடுத்த 23ஆம் திகதி பாடசாலையை மீளத் திறப்பதா – இல்லையா என்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகிறோம்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு, எதிர்க்காலத்தைக் கருத்திற்கொண்டே நாம் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளோம்.

இதற்காக நிபுணர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைப் பெற்றே நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts