Ad Widget

கொழும்பில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளதா?

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லை பகுதியிலும் மேல் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பு பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

Related Posts