சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் –வைத்தியர் யமுனா நந்தா

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய தினம் உலக தற்கொலை தொடர்பான...

மாடுகளை இறைச்சிக்கு வெட்டுவதை தடை செய்யும் விவகாரம்; ஒத்திவைத்தது அமைச்சரவை!!

இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் கொலை செய்யப்படுவதை தடை செய்வது தொடர்பான அரசின் முடிவு ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று அரச தகவல் திணைக்கத்தில் இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “டெங்கு...

ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில்...

காணாமல் போன இளைஞனும், பெண்ணும் சடலமாக மீட்பு !!

காணாமற்போயிருந்த இளைஞனும், பெண்ணும் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் திருநகரைச் சேர்ந்த இளம் பெண்ணுமே கடந்த 3ஆம்...

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுறங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிபடும் உரிமை எமக்குள்ளது!!

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்து

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு...

தியாகி திலீபனின் நினைவு தினம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேரணிக்கு தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக நகரசபை உறுப்பினர் ஜானுஜன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை...

குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே,...

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கைது செய்யுங்கள் – ஆர்.கேசவன்

பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் இதனைத் தெரிவித்தார்....

உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிஞ்சை பலகைகள் – வடக்கு ஆளுநர்

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிஞ்சை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யோசனை முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் சேதமடைகின்றன என்று சபைகளின் தலைவர்கள் சுட்டிகாட்டியதையடுத்து அவர் இந்த யோசனையை முன்வைத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,...

யாழில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என 62 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்....

யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தம்பியையா சிவராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன்...

மாடுகளைக் கொலை செய்வதைத் தடுக்கும் பிரதமரின் முன்மொழிவுக்கு ஆளும் கட்சி ஒப்புதல்!!

இலங்கையில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையில் மாடுகளைக் கொலை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருதற்கான முன்மொழிவை முன்வைத்தார். அதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய...

பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம்

2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

வெளிவாரி கலை பட்டப்படிப்புகளுக்கான புதிய அனுமதி இடைநிறுத்தம்!!

புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை வெளிவாரி கலை பட்டங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கலைத்துறையில் வெளிவாரிப் பட்டங்களுக்கான புதிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்ததாவது; “தற்போதுள்ள...

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது!!

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக்-5” தடுப்பூசி இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என்று ரஷ்யா உலக நாடுகளுக்கு அறிவித்தது. இப்போது, ​​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று...

20ஆவது திருத்தச் சட்டம் – கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன்...

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி...

ஒற்றுமையை வலியுறுத்தவே இங்கு வந்தேன்: சுமந்திரனின் இரவு விருந்தில் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இனத்தின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படும் முயற்சியை மேற்கொள்வோம். இதற்காகவே இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கடந்த சனிக்கிழமை சிறுப்பிட்டியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன்...
Loading posts...

All posts loaded

No more posts