- Monday
- April 27th, 2026
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜர் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், இரா.சம்பந்தன், எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாமன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,...
கனரக வாகன சாரதி உரிமத்தை வழங்கும்போது விண்ணப்பதாரர் போதைக்கு அடிமையானவரா என்பதை அடையாளம் காண மருத்துவ சான்றிதழில் ஒரு பரிசோதனையை மேலதிமாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பயணிகள் போக்குவரத்து முாகமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணை முறியில் எதிர்பார்க்கை பிணையில் விடுவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்தது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும் போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக...
தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்த போது, தனது முறைப்பாட்டை மீள பெறுவதாக மன்றில் கூறியதை அடுத்து குறித்த பெண்ணை மற்றொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான்,...
மழை வெள்ளம் தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் பல்வேறுப்பட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலர் வெள்ளங்களின் ஊடாக நடந்து செல்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் என்றும் சேறுகளினால் புண்கள் ஏற்படலாம் என்பதால், அனைவரும் அவதானமாக...
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் வைத்திய சேவையை பாதிக்கும் , புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் போதனா...
இலங்கையில் மிகவும் இளைய வயது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட...
வவுனியாவில் இன்று (09) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஏ-9 வீதி உட்பட...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சு ஒருவாரகாலத்திற்குள் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கத் தவறினால் ஆறான வாரம் தமது...
மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண...
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்...
எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். கை சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட தொற்று நீக்கிகளை (சனிடைசர்கள்) உற்பத்திகளை மேற்கொள்வதற்காகவும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு...
கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும்...
2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக...
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்தார். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை...
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின்...
வடக்கு மாகாண சபைக்கு உள்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 27 மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா...
ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச்...
Loading posts...
All posts loaded
No more posts
