- Monday
- April 27th, 2026
வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில்...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளில் உண்மையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். குறித்த செய்தி தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உடுவில் பிரதேசத்தில் மாத்திரமே தற்காலிக நடமாட்டத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக...
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் 39 பேரிடம் இன்று எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன இந்த...
முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு அதன் சாரதியை தாக்கிய சம்பவம் ஒன்று வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா நகர தரிப்பிடத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய நபர் ஒருவர் பல இடங்களுக்கு சென்றதுடன், மேலும் ஒரு நபரையும் அழைத்துக்கொண்டு பூந்தோட்டம் அகத்தியர்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்துள்ளார். முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை...
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின்...
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப்...
தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் , மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி , உடுப்பிட்டி சந்திக்கு அருகில்...
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்...
வடமாகாண தொற்று நோய்க்கான வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. தற்போது அங்கு, சுமார் 100இற்கு மேற்பட்ட கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 20 பேருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர்....
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 538 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானாது 30,613 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...
பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித...
வலி. கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக அச்செழுவைச் சேர்ந்த மக்கள் என அடையாளப்படுத்தி பொதுமக்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வலி.கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. “வலி.கிழக்கு பிரதேச சபையே சாதிய அடக்குமுறையினாலும் அரசியல் பழிவாங்கல்களினாலும் எமது கிராமத்தின் அபிவிருத்தியைத் தடுக்காதே” அச்செழு வாழ்மக்கள் என்று குறிப்பிட்ட...
துன்னாலை பகுதியில் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்னாலையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள்...
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்...
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. தற்போது நாட்டில்...
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார். தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் அவரது சகோதரியின் பிள்ளை ஒருவருமான இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும்...
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பண்டிகை காலங்களில் பயணத்தை குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி...
தங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் சுமார் எட்டாயிரம் கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமான...
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
Loading posts...
All posts loaded
No more posts
