Ad Widget

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? – மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், பங்கேற்குமாறு மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அதன் செயலாளர், சட்ட வல்லுனர்கள் மற்றும் சுகாதார பரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதா? இல்லையா, தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை நாளை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களில் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பிரச்சினை இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலும் உள்ளது.

எனவே இதன் காரணமாக தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாமென்றும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை ஜனாதிகதி சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts