Ad Widget

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்!!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று தொற்றுநோயியல் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

“முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும்.

ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டிய நபர்களை அடையாளம் காண பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.

அதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் உதவி பெறப்படும்.

தடுப்பூசிக்கு முறையான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், சில அதிகாரிகள் எடுத்த பல்வேறு முடிவுகளின் காரணமாக கோவிட்-19 தடுப்பூசிக்கான வயது வரம்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

இலங்கை வாங்கிய 5 லட்சம் கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் நாளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது” என்றும் மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

Related Posts