- Monday
- July 13th, 2026
வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப...
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக...
இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை டெல்டா வகையின் கூர்மையான பிறழ்வுகள் என்றும் இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக...
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “எனக்கும் என் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமையால், நாங்கள் பிசிஆர் சோதனை செய்தோம். அதில் தொற்றுள்ளமை...
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில் 13 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பொதுச் சந்தையை தற்காலிகமாக...
கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி...
இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையைக் கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். என்று தமிழ்த் தேசியக்...
வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி...
யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த...
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி...
டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய...
இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது - கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது....
இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பதவி மாற்றம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாகச்...
யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா கூறியுள்ளதாவது, “நேற்று நள்ளிரவு 11 மணியளவில், இராணுவ இலக்க தகடுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும்...
தற்போதுள்ள அமைச்சரவை அமைச்ச பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும், பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி...
மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். மடு...
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு வேளையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு...
கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்...
லப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் கொழும்பு விலை ஆயிரத்து 856 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 743 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு அதன் விலை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts
