- Friday
- April 24th, 2026
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்...
பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவும் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள்...
எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட எம்மை போன்ற உறவுகள் சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் மிக விரைவில் விடுவிக்க வேண்டும் என கோருகிறோம். பலர் செய்யாத...
யாழில் மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கு இடையில் மணல் ஏற்றும் இடத்தில் வாய் தர்க்கம் ஏற்பட்டு...
அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார். அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள்...
மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம்(புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது....
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் இலாபங்களுக்கு பாவிக்காதீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும்...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் மீண்டும் இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில்...
வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை,...
நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21) பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக் கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா...
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது. குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக...
மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 53 வயதான பெண் தற்போது தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்டா மாறுபாடு மாதிவெலவில் பரவி வருவதாக சந்தேகம் எழுந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையிலேயே மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமடகொட...
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபோன்று, திருத்தப்பட்ட விண்ணப்பங்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தரவுகளை கிராம உத்தியோகத்தர் மூலம் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார். எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக...
Loading posts...
All posts loaded
No more posts
