கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வெளியில் நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நபரிடமிருந்து...

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளது!!

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,“ கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக...
Ad Widget

நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியமல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதி நிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத அரச நிறுவனங்களின் பணியாளர்கள் அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடுநேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார். நாகேந்திரபுரம் பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக சென்ற டிப்பர் ஒன்றை நிறுத்துமாறு, படையினர் சமிஞ்கை...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்கள்...

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தது. இதனை அடுத்து விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!!

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அலுவலக நேரங்களில் 0707 677877 என்ற இலக்கத்தின் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொண்டு நியமனங்கள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ்அப், வைபர் அல்லது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலமாகவும்...

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு! புதிதாக 2028 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....

பயணத் தடையை நாளை நீக்காமல் தொடரவேண்டும் – மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

பயணக் கட்டுப்பாடுகளை நாளை நீக்காமல் தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபரி கோதபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. சங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், சில நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது போன்று நாடு மோசமான சூழ்நிலைக்கு திரும்பும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகளை...

யணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே...

நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு...

நேற்றைய தினம் (18) 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரப்பு!!

நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்களில் 23 பெண்கள் மற்றும் 31 ஆண்கள் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (19) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,534...

ஜனாதிபதியின் அதிருப்தியை அடுத்து தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

ஜூன் 11ஆம் திகதி கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பிழை இருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ வல்லுநர் சமரவீர தொற்றுநோயியல் பிரிவில் இருந்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தேசிய...

பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதி

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஐவர் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் என 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இடையே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெறப்பட்ட மாதிரிகளில் 17 பேரின் மாதிரிகள்...

கிளிநொச்சியில் தொற்று நீக்கும் பணியை தனிநபர் முfpன்னெடுப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியினை முன்னெடுத்திருந்தார். கிளிநொச்சி- கண்டாவளை, தருமபுரம் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை)...

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது....

பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாண நகரில் இயங்கும் பேக்கரிகளில், நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள், பொலிஸாரால் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த எதிர்வரும் புதன்கிழமை இரவு 10 மணி வரை ரயில் சேவை தொடரும் என ரயில்வே திணைக்களத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts