யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை என சுமந்திரனால் கூறப்பட்ட நபர் சீன பிரஜை அல்ல!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல. படத்தில் காட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் MOHOMAD MUSTAFA MOHOMAD HANIFA குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அவரே அங்கு பணியில் உள்ளார். ( i Road project...

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில்...
Ad Widget

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ.ஜெபநேசன்,...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் நேற்று (28) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி "நாய்" என விளித்து பேசியதாக மற்றுமொரு மாநகர சபை உறுப்பினரான ஜெ. ரஜீவ்காந்திற்கு...

உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு – விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல்

பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற இறப்புகளைத் தடுக்க, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து சுகாதார பிரிவுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்....

யாழ்ப்பாணத்தில் நேற்று 9,988 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கடந்த மே மாத இறுதியில் கிடைக்கப்பெற்றன. இவை சுகாதார...

யாழில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கொடுக்கிளாய் பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) என்ற பெண்ணின் மீதே இவ்வாறு தாக்குதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது...

யாழில் கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் . சுன்னாகத்திலுள்ள ஆலயமொன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமுற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...

துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும். எனினும்,...

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்....

வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்!!

வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலையின் ஊடாக பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு...

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம்!!

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (27) யாப்பாணம் கலாச்சார மண்டபத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்தினார். இதில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து யாழ்.மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்.. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையில் விற்பனை செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே, சில...

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா தொற்று!!

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார். அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!!

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு உடல் நலப் பாதிப்பு!!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

நல்லூரில் கலாசார சீரழிவு இடம்பெற்ற விடுதி முற்றுகை!! 6பேர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளடங்களாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று(வெள்ளிக்கிழமை)...

யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை!!

வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென கூறப்படுகின்றது. மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை...
Loading posts...

All posts loaded

No more posts