- Saturday
- July 11th, 2026
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தினம் இன்றாகும். எனவே பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். இதற்கு முன் இரண்டு முறை அதாவது பெப்ரவரி 3 மற்றும்...
அனுராதபுரம் -− ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்படி ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை...
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு வருகை தர பொலிஸார் மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி...
எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத ஒமிக்ரோன் நோயாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்விற்கான அறிகுறிகள் தென்படாத காரணத்தினால் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர்...
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும்...
யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் எனவே, அதனை அங்கீகரிக்குமாறும் கோரியே மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழகம் ஊடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பிரதேசத்தினை கல்வி...
நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மறந்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்நிலையில் பிரதேச சபையின் ஆளுகைக்குள்...
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை,...
இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சஞ்சய வணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571, 572...
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுப் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்றம், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். படகுப் பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின்...
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தபோதும் விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அதேநேரம், மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும் இன்று...
வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கப்பகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில்...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 31...
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பூஸ்டர் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொது...
யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக...
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு பொருளை கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர் அங்குள்ள பொருட்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார். இதன்போது ஊழியருக்கும்...
அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார்....
லங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading posts...
All posts loaded
No more posts
