Ad Widget

நல்லூர் பிரதேச சபையில் சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம்!

நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மறந்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்நிலையில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளின் நிலத்தின் பெறுமானம் புதிதாக அளவீடு செய்யப்பட்டுள்ளமையால் அதற்கேற்ப வருமான வரி அறவீட்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையால் வறிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனடிப்படையில் இது தொடர்பில் முதலில் கொள்கை உருவாக்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பொறிமுறையை தவிசாளர் சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.

அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் விலைக்கழிப்பு அல்லது பரிகாரம் கொடுப்பது சிறந்தது எனவும் விலைக்கழிப்பு செய்வதால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரத்தில் பின்நிலையில் உள்ள மக்களது நலன்கள் பாதுகாக்கப்படும் சந்தர்பம் வலுவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் பிரதேசத்தினை அடிப்படையாக கொண்டு நிலத்தின் பொறுமதி மற்றும் இதர காரணிகளை கொண்டு வரி நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தவகையில் விலைக் கழிப்புக்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்ந்து வறிய மக்களது தரவுகளை துல்லியமான ஆராய்ந்து கிராம உத்தியோகத்தரது உறுதிப்படுத்தலுடன் இதை மேற்ிகொள்ள வேண்டும் எனவும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதேநேரம் சபையின் வருமானம் இழக்கப்படாமலும் மக்களின் வாழ்வியலுக்கு ஊக்குவிப்பதற்குமான் திட்டங்களை முன்வைப்பதுதான பிரதேச சபையினது கடடையாகும் எனவும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் எமது சபையில் இன்றுவரை பல மில்லியன் நிதி அறவிடப்படாது நிலுவையில் உள்ளது. இவற்றை அறவிடுவதற்கான பொறிமுறைகளையும் உருவாக்குவது அவசியம் என்றும் அநேக உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை வரி அறவிடுவதென்பது அந்த பிரதேசத்தில் வாழ்துவரும் மக்களது நிலத்துக்கு அல்லது வாழும் உரிமையை உறுதிப்படுத்துதல் அல்லது அதற்கான அடையாளமாக கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் முற்றுமுழுதாக சோலைவரி விலைக்கழிப்பை வழங்காது அந்த மக்களினதும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சிறு நிதியை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் னவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கிணங்க தற்போது நிலப்பொறுமதியின் 8 வீதத்தை வரியாக அறவிடும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் காலத்துக்கு காலம் அது அதிகரித்தும் செல்கின்றது. எனவே கொண்டுவரப்படும் திருத்தமானது ஒரு சிறு அறவீட்டுடன் மேற்கொள்ளப்படுவதே சிறந்தது எனவும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

அந்தவகையில் சபையில் இன்றையதினம் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தற்போதுள்ள 8 வீத வரி அறவீட்டை இனிவருங்காலத்தில் உறுதிசெய்யப்படும் வறிய மக்களுக்கென கொள்கை ரீதியாக 2 வீதமாக குறைத்து அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடைமுறை அடுத்தமாதம்முதல் இது கொள்கை உருவாக்க அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதேசத்தில் காணப்படும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கும் அவற்றை தரம் பிரிப்பதற்குமான விசேட பொறிமுறையை உருவாக்கவதனூடாகவே அதை மேற்கொள்வதில் வெற்றிபெற முடியும் என உறுப்பினர் ஒருவரால் முன்மொழிவொன்று கொண்டுவரப்பட்டது.

இதற்கிணங்க திண்மக்கழிவு தரம்பிரித்து அகற்றுவதற்காதன பொறிமுறையாக முன்பள்ளிகளில் இருந்து ஆரம்பிப்பது என்றும் சிறுவர்களுக்கு இத்தகைய விழிப்பணர்வுகளை புகட்டுவதனூடாக அதை வெற்றி கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடங்களில் இருந்து இந்த விழிபுணர்வுகளை முன்னெடுத்தால் எதிர்காலத்தில் அது வெற்றிபெறும் சாத்தியக்கூறுக்ளும் அதிகமாக காணப்படுகின்றது.

இதன் அடுத்த கட்டமாக முன்பள்ளிகளிலிருந்து பாடசாலைகளுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என்றும் .பாடசாலைகளிலும் அந்த நடைமுறையை சுகாதர புத்தியோகத்தர்கள் ஊடாக சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இவ்வாறு மாணவர்கள் மத்தியில் இந்த திண்ம கழிவகற்றல் மற்றும் வகைப்படுத்தில் பொறிமுறையை முன்னெடுத்துச் சென்றால் அதன் இலக்கை எதிர்காலத்தில் இலகுவாக வெற்றிகொள்ள முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts