- Saturday
- July 11th, 2026
நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாகவே இருந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக தாமதமின்றி பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறு சுகாதார...
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. இதன்போதே, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களிற்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பினால் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு...
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த கேள்வியை கடற்தொழில் அமைச்சரிடம் வினவினார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர்...
இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். https://www.jaffnajournal.com/wp-content/uploads/2021/06/medical-medicine-pills-pill-tablets-capsules-capsules-tablet-packed-.jpg நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடன் உதவியுடன் மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். நேற்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது....
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது இந்த தருணத்தில் அவசியமானது என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க, அரசுக்கு அறிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெட்கோ எரிபொருள்களின் விலையை அரசு திருத்தியமைக்கும் என நேற்று இடம்பெற்ற...
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams...
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும், தெரிவிக்கின்றனர். காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குவதாகவும், இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரையை இரசிக்க வருபர்களுக்கும்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 656ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...
இலங்கை கடற்பரப்புக்குள்அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும்...
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கி அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்தநிலையிலேயே, புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய போத்தல் குடிநீர் 500 மில்லி லீற்றருக்கான விலை 50 ரூபாயாகவும் ஒரு லீற்றருக்கான விலை 70...
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) பிணை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும்...
தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...
தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து...
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர். வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர். அன்றைய தினம்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் திடீர் எழுச்சி காரணமாக மருத்துவமனைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன என பொதுச் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது என்று அவர் இன்று ஊடகமொன்றுக்கு...
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் நாங்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளும் அதனை எதிர்க்கின்றனர். இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் நேற்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading posts...
All posts loaded
No more posts
