எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது இந்த தருணத்தில் அவசியமானது என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க, அரசுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெட்கோ எரிபொருள்களின் விலையை அரசு திருத்தியமைக்கும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள இழப்புக் காரணமாக சிபெட்கோ பெற்றோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							