இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக...

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
Ad Widget

ரணில் பிரதமராக பதவி ஏற்றமை ஜனநாயக விதிமுறைக்கும் முரணானது!! – கஜேந்திரகுமார்

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு...

சண்டிலிப்பாயில் வாள்வெட்டு!! கண்டுக்காமல் நின்ற பொலிஸார்!!!

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு மற்றொரு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது – சுமந்திரன்

எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார். ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில்...

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத...

சுமந்திரன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியல் கட்டளைசட்டங்களை இடை நிறுத்தி விவாதத்திற்கு எடுப்பதா ? இல்லையா ? என சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு...

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இன்று நள்ளிரவு முதல் க.பொ.த. சாதாரண தர தனியார் வகுப்புக்களுக்கு தடை

இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை 2021 (2022) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் வகுப்புக்களை...

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி...

நாளை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் !!

நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன் நாளைய தினமும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை, எரிபொருளை...

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை!!

எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை!!

நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையில்லாமல் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை...

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி இன்றையதினம் முள்ளிவாய்க்காலை வந்தடையும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார். நாட்டில் சுமார்...

இன்று மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு!!

நாட்டில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...

தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு...

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!! பிரதமர் ரணில்

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கவே முடியாது என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி...

இந்துவின் செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுக்கிறது!!

இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் “மீண்டும் குழுவாகி தாக்குதல்களை நடத்தவுள்ளனர்” என்ற செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. “செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சின் பேச்சாளர் தி இந்துவிடம்...

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர். முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த...
Loading posts...

All posts loaded

No more posts