விசுவமடுவிலிருந்து ”கோட்டா கோ கம” நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம்!!

கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு...

9 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர் 3. கெஹலிய ரம்புக்வெல்ல...
Ad Widget

நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது அமைப்புக்களினால் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஒவ்வொருவருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாக விகாரையில் வசிக்கின்ற பௌத்த துறவிகளுக்கு குறித்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இன்றைய வருடமும் நாக விகாரையில் அமைந்துள்ள இந்து பௌத்த ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு...

கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது என்.ஸ்ரீகாந்தா தெரிவிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்...

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் – பிரதமர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டம் செய்யும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம்,...

இலங்கை மக்களுக்கு திமுக நிதி உதவி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் ரூ.30 லட்சம் நிதியை புதன்கிழமை அளித்தனா். பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திமுக மக்களவை,...

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உடன்...

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளன. இரண்டாம் தவணை ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி...

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரீமா நிறுவனத்தினால் வெளியிடப்படடுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கயை கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை- பிரதமர்

அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார். அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது....

பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் சாத்தியம்

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை...

மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயம்!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்....

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 (திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆணையாளர் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்...

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது!!

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் வவுனியாவில் இருந்து பேரூந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக பொலிசாருக்கு கிடைத்த...

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க...

உணர்வுபூர்வமான நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களும் சுடர் ஏற்றி அஞ்சலித்தனர். தமிழ் மக்கள் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படுகின்றதா?

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐஓசி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை!!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார். ஆளுநர்...

கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக...
Loading posts...

All posts loaded

No more posts