Ad Widget

சுமந்திரன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியல் கட்டளைசட்டங்களை இடை நிறுத்தி விவாதத்திற்கு எடுப்பதா ? இல்லையா ? என சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்தார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு ஒரு நாளிலேயே மேற்கொள்ள முடியாது.

இதனால் நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி இந்த வாக்கெடுப்பு இன்றையதினமே மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

எனினும் நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்த முடியாதென தெரிவித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரினார்.

இதையடுத்து நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Related Posts