இன்று மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு!!

நாட்டில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...

தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு...
Ad Widget

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!! பிரதமர் ரணில்

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கவே முடியாது என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி...

இந்துவின் செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுக்கிறது!!

இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் “மீண்டும் குழுவாகி தாக்குதல்களை நடத்தவுள்ளனர்” என்ற செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. “செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சின் பேச்சாளர் தி இந்துவிடம்...

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர். முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த...

இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு...

ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

நாட்டில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தபட்டடு வருகின்றது. இந்நிலையில், பகுதியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகின்றது. இந்நிலையில், ஊரடங்கின் போது தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை...

பிரதமர் அதிரடி நடவடிக்கை ! அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் நிலவும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் திரவங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு யோசனைகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர...

பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையின் 26ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ,ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பிற்பகல் பதவிப்...

வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு!!

ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!!

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என...

மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்!! – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். “இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை...

அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது...

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திடம் வலியுறுத்தினார் சாணக்கியன்!

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து...

மீண்டும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்!!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்வாக சேவைகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் நாடு அராஜகமாகி விடுவதைத் தடுக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு...

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts