Ad Widget

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டம் – சர்ச்சையை கிளப்பும் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரை கைவிட வேண்டும் என அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.இதற்கு செவிசாய்க்காத ரஷ்யா மீது பொருளாதார தடைகளை பல நாடுகள் விதித்துள்ளன.

இதன் காரணமாக கோபமடைந்த ரஷ்யா மேற்குலக நாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களை ஆயுதங்களாக நன்கொடை வழங்கி ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளனர் எனவும் புடின் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Related Posts