- Saturday
- April 11th, 2026
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில்...
மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்வதாகவும் நாளைய தினம் சூறாவளியாக வலுவிழக்க கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 90 கி.மீ...
மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க...
மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது. இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை,...
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை விலக்கிக்கொண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணிப்பதுடன் நிமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர...
உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளுக்கு குறித்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கே குறித்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை...
வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றையதினம் நேரில் வருகை தந்தார். பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு நேற்று காலை வருகை இராணுவத் தளபதி, விகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆராய்ந்தார். வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு...
அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம்...
நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வடக்கு மாகாணம் தழுவிய பாரிய கண்டனப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல வைத்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன....
விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக...
தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடிப்பதற்காக, அவரை வாளால் வெட்டிய நிலையில் மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இப் பயங்கர சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியிடம் கொள்ளை இடுவதற்காக மூவர் கொண்ட குழு வீட்டுக்குள் நுழைந்தள்ளது....
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாவது பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இருப்பினும், இரண்டாவது பூஸ்டர் டோஸ் 20-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு...
இலங்கையின் வடக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இது புயலாக மாறுமா என்பது அடுத்த இரு நாள்களுக்குப் பின்னரே கணிக்க...
ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2022-05-03 திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைப்புச் செய்தியைப் பயன்படுத்தி ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என...
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இந்த ஹர்த்தாலுக்கு 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், ரயில் , பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம்...
Loading posts...
All posts loaded
No more posts
