Ad Widget

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்காரணமாக மருத்துவமனைகளின் செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts