- Saturday
- April 11th, 2026
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும்,...
“சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய“ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65...
அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வந்துடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் அலைபேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு உயிரை மாய்த்துள்ளனர். “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு...
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில்...
குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர். மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பட்டப்பகலில் குருநகரில் வீதியில் வைத்து...
சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால்...
நல்லூர் கல்வியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றையதினம் (புதன்கிழமை) இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். 3 மோட்டார் சைக்கிளில் வந்த...
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர். எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் “நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்போம்…” என்ற பதாகைகளை ஏந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இரண்டையர்களில் ஒருவரான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே உயிரிழந்தார். “இரட்டையர்கள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேனீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். மீள...
பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில...
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில்...
வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் , வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள்...
நாட்டில் தற்போது ஏற்பட்டு நெருக்கடி நிலை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பனவற்றுக்கு தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனஇலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது தெரிவித்துள்ளார். நாடு முழுதுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சில கிராம...
நாளைமறுதினம் நாடுமுழுவதும் நடைபெறவுள்ள முழுக்கடையடைப்பு மற்றும் 24 மணித்தியால கூட்டுப் பணிப்புறக்கணிப்புக்கும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் கடையடைப்பை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் செயலாளர் ரவி...
நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும் மாலை...
எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்,11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்று (29) நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையே வெற்றியளித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள்...
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரிமாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அலரிமாளிகைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பஸ் மற்றும் பொலிஸ் ட்ரக் வண்டிகளை அகற்றுவதற்காக...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்...
இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
