- Saturday
- April 11th, 2026
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதன்முறையாக காயமடைந்த ரஷ்ய போர் வீரர்களைப் பார்வையிட்டுள்ளார். உக்ரைன் போர் முயற்சிக்கு ஆதரவைப் பெறுவதற்காக அவர் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், மொஸ்கோ வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வரும் இரண்டு வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்தார். வெள்ளை நிற கோட் அணிந்த புடின், இரு வீரர்களுடன் அவர்களின்...
இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்....
நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) மற்றும் நாளையும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 7,500 மெட்ரிக் டன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை நோக்கி பயணிப்பதாகவும், ஒரு கப்பல் நாளை நாட்டிற்கு வரும் என்றும் மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை வரும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ் தேசிய மக்கள்...
கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார்....
அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மட்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர். இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோத்தர்கள் சேவைக்கு...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர். இந்த நிலையில்,...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இன்று (25) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான...
எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழில் கடந்த சில தினங்களாக...
தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால்...
உக்ரைனை ஆக்கிரமித்த காலப்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் இதனை தெரிவித்துள்ளார் 2022, பெப்ரவரி 24ஆம் திகதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்தும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. புற்றுநோயால்...
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார். அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கமுடியும். இருப்பினும் பணவீக்கமானது 30 - 40 சதவீதமாகவே தொடர்ந்து காணப்படும். அதனை மத்திய வங்கியினால் குறைக்கமுடியாது. எனவே இதன் விளைவாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைய நேரும் என்பதுடன், மேலும் பலர் வறுமைக்குத் தள்ளப்படுவர் என்று...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்மார்ட்’ அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம்...
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் தொடர்பாக 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனை அறிந்து பெருமளவான மக்கள்...
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி பகுதியில் சமையல் எரிவாயு விநியோகிக்க வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பரமேஸ்வரா சந்தி பகுதியில் உள்ள லிட்ரோ முகவர் நிலையத்தில் கடந்த சில நாட்களாக எரிவாயு வழங்கப்படுவதாக கூறிவந்தாலும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு...
அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65...
Loading posts...
All posts loaded
No more posts
