- Saturday
- April 11th, 2026
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது. இவற்றைச் செய்வதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாடு இழக்க நேரிடுகிறது என...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிது. எனினும் தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சாதனா. இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர்களது 16 வயது மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் பப்ஜி விளையாடுவதை தாய் சாதனா...
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள செவாறோ - டொனெஸ்க் நகரில் கடுமையான மோதல்கள் தொடர்கின்றன. ரஷ்ய படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் உக்ரைன் படையினர் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மரியுபோல் நகரில்...
நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும்...
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்று (07) நிறைவு பெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்து தாக்கியதில் காயமடைந்த 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது....
கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று திங்கட்கிழமை (07) நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது. ஆனால், அன்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் முதலாம் நாள் போட்டிகள்...
பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குரிய போதிய வருமானம் இல்லாததால் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள்...
நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் வழமை போன்று டீசல் மற்றும் பெற்றோல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் குறைந்த அளவிலேயே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏற்கனவே நீண்ட வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன....
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. நேற்றையதினம் (7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மோசமான நிலையில், காணப்படுவதாக வைத்திய நிபுணர் க.காண்டீபன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாது கடும் நெருக்கடியில் வைத்தியர்கள் கையறுநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளமையினால் சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது....
சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்துக் கடந்த சில நாட்களாகப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு...
உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலநக நாடுகள் எதிர்நோக்கி வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல...
ரஷ்யா மேலும் 61 அமெரிக்க அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.முன்னணி பாதுகாப்பு மற்றும் ஊடக நிர்வாகிகளுக்கு இவ்வாறு பொருளாதார தடை விதித்துள்ளதுடன், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதையும் தடை செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள், ஊடக தளங்கள், தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விமானம் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்களின்...
யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கல்லூரியில் முதன் முறையாக ஆரோக்கிய உணவகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரோக்கிய உணவக நடைமுறைப்படுத்தல் அதிபரின் அறிமுக உரையுடன் பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்தியர் கோ.றஜீவ் மற்றும் செயற்குழு உறுப்பினர் யதுராஜ் அவர்களது பங்கேற்றலுடன் நேற்றையதினம் (06.06.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரோக்கிய உணவுகளான இலைக்கஞ்சி...
நாட்டில் அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இணையத்தளத்தில் எதிர்காலத்தில் உரிய தொழில் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகைமைகள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ...
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000...
Loading posts...
All posts loaded
No more posts
