தோற்றுப்போன ஜனாதிபதியாக என்னால் போக முடியாது- எனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்வேன் -ஜனாதிபதி

ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தனது ஆட்சிக்காலத்தின் எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எனினும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இலங்கை தசாப்தகாலங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. எனக்கு ஐந்து வருடத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது நான் மீண்டும்...

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார். கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபை ஊழியர்களின்...
Ad Widget

அபாய நிலையில் இலங்கை!! – பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை முழுவதும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதிகளிலும் பொலிஸார் ஒளிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய வீடுகளில் இரு்ககும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிற்கு வீட்டிற்குள் அவதானமாக இருக்கமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும்...

ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா!!

மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் Ben Wallace தெரிவித்துள்ளார். பிரித்தானியா அனுப்பும் M270 multiple-launch ரொக்கெட் அமைப்பு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என்று பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எத்தனை ஆயுதங்கள்...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்!

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்...

ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரன்

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்: அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தார் பிரசன்ன !

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளஅதேவேளை அதன் மதிப்பு தோராயமாக 1795 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்தியாவின் அட்சயபாத்திர உதவிகள்!!

யாழ் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக கோரியதன்படி இந்திய அரசு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது. இந்த மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று கையளித்தார்.

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!!!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க முயற்சி – சஜித் பிரேமதாச

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (55) நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்...

இன்று முதல் 10ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி...

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு...

தேவாலயத்தில் நுழைந்த மர்மநபர்கள் சூப்பாக்கிச் சூடு- 50 பேர் உயிரிழப்பு!!

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி...

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை...

2022ஆம் ஆண்டு மூன்றாம் தவணை டிசெம்பர் 23ஆம் திகதிவரை நீடிக்கும்!!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...

அமெரிக்க வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!!! 4 பேர் பலி!!

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலைக்குள் புகுந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டுள்ளார். தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்....

எரிபொருள்களின் கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் எரிபொருளின் கையிருப்பு தொடர்பான விபரத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இதன்படி எரிபொருள் கையிருப்பு பின்வருமாறு: டீசல் – 18,825 MT சூப்பர் டீசல் – 42...

வவுனியாவில் இளைஞன் மாயம்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா...

இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் 15-200 சதவீதம் வரை உயர்வடைகின்றன!!!

நேற்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ்...
Loading posts...

All posts loaded

No more posts