- Saturday
- April 11th, 2026
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு...
லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் வியாழக்கிழமை ( ஜூன் 2) 414 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி நாடளாவிய ரீதியில் இன்றையதினம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறைகளையுடைய 50 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன. கீழுள்ள லிங்கை கிளிக்...
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணிநேரம் மின்வெட்டு...
நாட்டில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியுடன் வழங்கப்படும் இந்த உரமானது...
ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் நடவடிக்கைகள் 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த...
வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,மத்திய சுகாதார அமைச்சினால்...
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர். கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில்...
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை நினைத்துதான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். தமது முழுமையான ஒருமித்த கருத்துடன் 21ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்...
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெறுமதி சேர் வரியை (VAT) 8% இல் இருந்து 12% ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அடுத்ததாக, தொலைத்தொடர்பு வரியை 11.25% லிருந்து 15% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சட்டத்...
எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி மேலும் மூன்று இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கை தமிழர்கள் சென்றடைய ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்திய அரசைப் பொறுத்த அளவு இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்களை...
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி நியமன கடிதத்தை கையளித்திருந்தார். அதற்கமைய இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கிய விக்கும் லியனகே இராணுவ தளபதியாக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (புதன்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக...
கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி...
ரஷ்யப் படைகள் இப்போது செவரோடோனெட்ஸ்கில் 70 விகித கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், கிழக்கு உக்ரைன் நகரத்தில் கடுமையான சண்டை நடந்து வருகிறது என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இருந்து பேசிய Serhiy Hayday அவர் இதனை கூறியுள்ளார். நகரில் வெற்றி ரஷ்யாவிற்கு ஒரு பெரிய மன உறுதியை அளிக்கும்...
நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி மற்றும் 3 ஆம் திகதி 2 மணிநேரமும், ஜூன் 4 ஆம் திகதி ஒரு மணிநேரமும்...
அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர். வடக்கு கிழக்கு தழுவிய...
Loading posts...
All posts loaded
No more posts
