Ad Widget

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்திற்கு நிரந்தர விசாவை வழங்கியது அவுஸ்திரேலிய அரசாங்கம்

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர்.

இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர்.

2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்பினர்.

மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தமை குறித்து தமிழ் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு சிறுமிகளும் பாடசாலை செல்கின்றனர்,நடேஸ் மீண்டும் வேலைக்கு செல்லவுள்ளார்.

நிரந்தர விசா குறித்த செய்தியால் தமிழ் குடும்பத்தின் நண்பர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

அந்த குடும்பத்துடன் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கைகளை அல்பெனிஸ் அரசாங்கம் மிக துரிதமாக மேற்கொண்டமைக்காக நான் அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம்- சமூகத்தில் இணைவதற்காக அந்த குடும்பத்தினர் கடுமையாக போராடினார்கள் என தெரிவித்த ப்ரோன்வின் டென்டில் என்பவர் நிரந்தர வாழ்க்கையால் மாத்திரம் கிடைக்ககூடிய அமைதியை இறுதியாக அந்த குடும்பத்தினர் அனுபவிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts