- Thursday
- September 18th, 2025

யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. (more…)

யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் மூன்றாவது கிளை அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என அதன் பிராந்திய இணைப்பாளர் ஸ் ரீபன் ரோமன் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சாராயப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. வைத்தியசாலை ஆண்கள் விடுதியில் உள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்றவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தர் அதுகுறித்து வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டனர். (more…)

23 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பொன்னாலை ஜே/170 கிராம சேவகர் பிரிவில் மின்சார விநியோக மார்க்கங்கள், கிராமிய வீதிகள், குடிதண்ணீர் விநியோகத் திட்டங்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. (more…)

பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா. (more…)

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். (more…)

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

All posts loaded
No more posts