Ad Widget

வைத்தியர் திருமாறன் அவர்கள் கொழும்பிற்கு இடமாற்றம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் தற்காலிக இடமாற்றம்பெற்று கொழும்பிற்கு சென்றுள்ளதாக யாழ். அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

மேற்படி வைத்தியர் கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் கந்தர்மடம் சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானர்.

இந்நிலையில் வைத்தியரின்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு கோரி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கடந்தவாரம் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அரச வைத்திய சங்கத்தின் தாய் சங்க தலைவர் மஹிபால நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொணடு வைத்தியர்கள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மனம் எட்டப்பட்டுள்ளதாக வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, வைத்தியரின் குடும்பத்தினர் கொழும்பில் வசிப்பதனால் 3 மாதத்திற்கு தற்காலிக இடமாற்றம் வழங்குமாறு வைத்தியர் திருமாறன் கேட்டதற்கு இணங்க கொழும்பிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய சங்கத்த தலைவர் மேலும் கூறினார்.

Related Posts