Ad Widget

இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளிமாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கடமைக்கு சென்ற ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிகள் மறுக்கப்படுவதாக கூறி ஆசியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி யாழ். மற்றும் வவுனியா தெற்கைச் சேர்ந்த 70ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வடமாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் 2010.12.01 திகதி NP/20/ET/F/2/DTஇலக்கம் கொண்ட கடிதத்தின் பிரகாரம் 2 வருட ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடமாற்றத்தின் பிரகாரம், தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்காக உடைமைகளுடன் வந்த போது, மீண்டும் கடமையாற்றிய வலயங்களுக்கு செல்லுமாறு, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கான நியமனத்தினை பெற்றுத் தருமாறு கோரி இன்று யாழ். மனித உரிமைகள் காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை, முறைப்பாட்டின் பிரகாரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts