- Wednesday
- May 14th, 2025

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. (more…)

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடமாகாண சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. (more…)

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் என்று யாழ். இந்திய கவுன்சிலர் ஜெனரல் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

கரவெட்டி கரணவாய் பகுதியில் காணாமல் போன 13 வயதுடைய சிறுவனை மீட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். (more…)

நாவாந்துறை பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிகமாக வீடுகளை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் இன்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி சர்வதேச சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை நாம் எடுத்துக் கூற வேண்டும். இதுதான் எமது அடுத்த கட்ட நகர்வின் அடித்தளமாக இருக்கும். (more…)

வடமாகாண சபை தேர்தலில் அரசுக்கு பலத்தினை தந்தால், வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்' என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். (more…)

தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்ததாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு எல்.விக்கிரமாரச்சி தெரிவித்தார். (more…)

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்' என வடமாகாண சபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். (more…)

யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

தீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

தென்மராட்சி பிரதேசத்தை இரண்டு பிரதேச செயலக பிரிவாக மாற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்திடம் தென்மராட்சி மக்களினால் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)

All posts loaded
No more posts