- Sunday
- October 18th, 2026
குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி...
இலங்கையில் ராஜபக்சே அரசு போய், அவருடைய முன்னாள் நண்பர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. இந்த தேர்தல் முடிவு, இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியமானது, எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்? உண்மையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானது. ராஜபக்சேவின் வீழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கொண்டாடி வருகின்றன....
கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில்...
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் புலி என்ற இந்த ஒரு சொல்லே போதும், இந்நிலையில்...
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவிற்கும் அவரது தம்பி குறளரசனுக்கும்...
"தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!" - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள்...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி...
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு - நம்பிக்கையாகவும் உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலகுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் யாவரும் எதிர்காலத்தில் தூய்மையான, அரசியல் கலப்பற்ற, வினைத்திறன் மிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அமைவதற்கு உடனடியாக...
தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் ஒரு முக்கிய அங்கம் என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தேசிய ரீதியில் நாங்கள் எமது...
தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை...
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர்...
எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைவரும் சட்டத்தை மதித்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன்று மாலை இலங்கையின் புதிய...
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில்...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...
நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்குமிடத்து ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இத்தேர்தலை குறிப்பிட முடியுமென தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலையம் குழு தெரிவிக்கின்றது. இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலைய தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 1982ஆம் ஆண்டுக்குப்பிறகு...
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது. எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார். அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம்...
Loading posts...
All posts loaded
No more posts
