Ad Widget

உதயப்பெரேராவின் இடத்தை நிரப்புகிறார் ஜெகத்

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தீடீர் இடம்மாற்றத்தையடுத்து புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

army-udaya

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த தை மாதம் பொறுப்பேற்ற உதயப்பெரேரா நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய இடத்திற்கு ஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி பதவியேற்பார் எனவும் மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts