Ad Widget

வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக சார்க் தேசங்களை ஒன்றுகூட ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லா சார்க் நாடுகளையும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

President_Rajapaksa_Addresses_the_18th_SAARC_Summit_

President_Rajapaksa_Addresses_the_18th_SAARC_Summit_1

“அரசியல் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகளிலிருந்து விலகியிருப்பதே சார்க் அமைப்பின் நடைமுறையாக இருந்தபோதிலும் வெளிப்புறச் சூழ்ச்சிகளை நாங்கள் எதிர்க்க வேண்டும்” என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

“உறுப்பு நாடுகள் மீதான வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருவது சார்க் மனநிலையை பிரதிபலிப்பதாக அமையும்.” அவர் இந்தக் கருத்துக்களை நேபாளத்தின் காத்மண்டுவில் ராஷ்திரிய சபா கிரிஹா (நகர மண்டபம்) இல் இடம்பெற்ற 18வது சார்க் உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பினை (சார்க்) உருவாக்குகின்ற எட்டு நாடுகள்/ அரசாங்கங்களின் தலைவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் அஷ்ரப் கனி (Mohamed Asreb Gani) பங்களாதேஷ் பிரதமர் ஷக் ஹசினா (Shek Hasina) பூட்டான் பிரதமர் லைன்சென் வஷரிங் தொப்கே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி (Narendra Modi ) மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்.

“சமாதானம் சுபிட்சத்திற்கான ஆழ்ந்த ஒருமைப்பாடு” என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாண்டுக்கான உச்சிமாநாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைவர்கள் தங்களது உரைகளில் பிராந்தியம் சம்பந்தமான பல்வேறு விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினர்.

ஆனால் பயங்கரவாதத்தினை எதிர்கொள்வதற்காக மேலதிக பாதுகாப்பிற்கும் பிராந்தியமாக இணைந்து செயற்பட வேண்டும் என்பவற்றை உள்ளடகிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் என்ற தலைப்பு மீண்டும் இடம்பெறுவதாக அமைந்தது.

“பயங்கரவாதம் எல்லா எல்லைகளுக்கும் பரவியுள்ளது” என பிரதமர் தொப்கே தெரிவித்ததோடு “பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களிலும் அதைக் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அழிக்கவும்,” சார்க் தேசங்கள் இணைந்து பணியாற்றும் தேவையைச் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் அயல் நாடுகளுக்கெதிராக எங்கள் நிலத்தைப் பயன்படுத்த எவருக்கும் அனுமதிக்க மாட்டோம்” என ஆப்கான் ஜனாதிபதி கனி தெரிவித்தார்.

Related Posts